புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்சன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்தஇளைஞன் புற்றுநோயால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்