
வயற்பாடசாலை அறுவடை விழா
-கல்முனை நிருபர்-
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளுக்கான வயற்பாடசாலை அறுவடை விழா சேனைக்குடியிருப்பு விவசாயப் போதனாசிரியர் பிரிவிலுள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் விவசாய தொழில்நுட்ப உதவியாளர் என்.மஹீஸாபானு ஒழுங்கமைப்பில் விவசாயப்போதனாசிரியர் எம்.எஸ்.நஜ்முர் றஹ்மான் தலைமையில் நடைபெற்றது
இங்கு விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகள் அறுவடை செய்யப்பட்டன. இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.சல்மான்இ தலைமைப்பீட விவசாயப்போதனாசிரியர் எஸ்.எல்.எம்.றலீம், வலய விவசாயப்போதனாசிரியர் ஏ.பி.தஸ்லிம், பாடவிதான உத்தியோகத்தர் பி.குணநீதராஜா உட்பட விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப்பலர் கலந்து கொண்டனர். விவசாயத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

