மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம்

-மன்னார் நிருபர்-

மன்னார் மாவட்ட காதி நீதிபதியாக மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் பிரதான மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம் நியமனம் பெற்ற நிலையில் நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் மன்னார் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் மன்ஃமூர்வீதி ஜும்மா பள்ளிவாசல் பிரதான மௌலவியாகவும், மன்னார் மாவட்ட உலமா சபையின் உப தலைவராகவும் பதவி வகிக்கின்றார்.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு சமய, சமூக நிகழ்வுகளில் பங்கு கொண்டு மாவட்டத்தில் இன மத ஒற்றுமைக்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்