யாழ் – கொழும்பு விமானச் சேவை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; இந்திய துணைத்தூதர்

யாழ் – கொழும்பு விமானச் சேவை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; இந்திய துணைத்தூதர்

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ் இந்தியத் துணைத்தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று புதன் கிழமை யாழ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோது அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் யாழ்பாணம் – கொழும்பு விமானச் சேவை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்