கொஞ்சம் கோப்பி குடிக்கலாமா?

தினமும் எவ்வளவு கோப்பி குடிக்கலாம்? எந்த சமயத்தில் குடிக்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா?

கோப்பி என்றாலே நம் அனைவருக்கும் பிடித்த பானம். அந்த கோப்பியை காலையில் எழுந்ததும் ஒரு கப் குடித்தால் தான் அன்றைய நாளே சிறப்பாக துவங்கும். கோப்பி என்பது ஆற்றலை வழங்கும் ஒரு பானமாக கருதப்படுகிறது. புத்துணர்ச்சி தருவதாலேயே கோப்பி குடிக்க பலர் விரும்புகிறார்கள்.கோப்பி பிரியர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கோப்பி குடிப்பார்கள். இருப்பினும், உங்கள் கோப்பி நுகர்வில் கவனம் செலுத்தாவிட்டால், அது உங்கள் ஆரோக்கியத்தில் சில மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கு அதிகமான கப் கோப்பி குடிப்பதால் உங்கள் உடலில் காஃபின் ஏற்றப்படுகிறது. அதிகப்படியான காஃபின் நுகர்வு பல சுகாதார பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கோப்பி குடிக்க சிறந்த நேரம்

காலை எழுந்ததும் கோப்பி குடிப்பதால் நாள் முழுவதும் நீங்கள் எதிர்பார்க்கும் பலன்களை உங்களால் பெற முடியாது. காரணம், உங்கள் உடலில் உள்ள கார்டிசோலின் அளவு காலையில் மிக அதிகமாக இருக்க வேண்டும். இது ஒருவரை விழித்திருக்கவும் ஆற்றல் மிக்கதாகவும் வைத்திருக்கும் மூலக்கூறாக அறியப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்தவுடன் கோப்பி குடிப்பதால் கார்டிசோலின் உற்பத்தியை காஃபின் குறைத்துவிடும்.

கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் கோப்பி குடித்தால், அது உங்கள் உடலில் கார்டிசோல் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. அதுவே கார்டிசோல் உற்பத்தி காலை 10 மணிக்கு பிறகு குறையும். எனவே, கோப்பி குடிக்க விரும்புபவர்கள் 10 மணிக்கு மேல் அல்லது மதிய வேளையில் கோப்பி குடிக்கவும். அதிலும்இ காலை உணவு சாப்பிட்ட பிறகு கோப்பி குடிப்பது சிறந்தது என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் கோப்பி குடிக்கும் போதுஇ குறைந்த அளவு குடிப்பது தான் நல்லது. ஏனெனில் கோப்பி குடித்த அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இரத்த ஓட்டத்தில் காஃபின் உச்சம் பெறுகிறது. பின்னர் பல மணிநேரங்களுக்கு உடலில் காஃபின் அளவு உயர்ந்தே காணப்படும்.

எனவேஇ ஒவ்வொரு முறையும் கோப்பி குடிக்கும் போது 2 அவுன்ஸ் அளவு குடிப்பதே சிறந்தது. அதேபோலஇ நீங்கள் மாலையில் எடுத்துக்கொள்ளும் கோப்பியை மிகவும் தாமதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில் மிகவும் தாமதமாக எடுத்துக் கொள்வதால் அது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்