வழமை போன்று இயங்கும் தனியார் பேரூந்து சேவைகள்

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் புதன் கிழமை பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தனியார் பேரூந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

ரயில்வே திணைக்களத்தின் அறிவித்தலின் படி 11 அலுவலக ரயில் சேவைகள் இன்றைய தினம் செவ்வாய்கிழமை இடம்பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்