
மலையகத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு
மலையகத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு
மலையகத்தில் ஹட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை ஏற்பட்டுள்ளதற்கான முக்கிய காரணமாக முட்டைகளை சில்லறை மற்றும் மொத்த விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்கள் பணிப்புறக்கணிப்பு செய்தமையே காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டை உற்பத்தியாளர்கள் முட்டையை விற்பனை செய்வதனால் தாமும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதாக முட்டை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
