
எல்லைகளை திறக்கிறது சீனா
எல்லைகளை திறக்கிறது சீனா
சீனா நாளை முதல் அனைத்து வகையான விசாக்களையும் வழங்குவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக தமது எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கடந்த மாதம் கொவிட்-19 இன் அண்மைய மீள் எழுச்சியை முறியடித்ததாக அறிவித்ததை தொடர்ந்து, விதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு நீக்கப்படுவதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன்இவெளிவிவகார அமைச்சு மேலும் கடந்த 2020 மார்ச் 28 ஆம் திகதிக்கு முன் வழங்கப்பட்ட விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டினரும்இ அது செல்லுபடியாகும் திகதிக்குள் சீனாவிற்குள் நுழைய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் தமது குடிமக்களுக்கான ஆலோசனையை சீனா மீளப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
