நியுசிலாந்து அணியில் வீரர்கள் மூவர் இடம்பெறமாட்டார்கள்

நியுசிலாந்து அணியில் வீரர்கள் மூவர் இடம்பெறமாட்டார்கள்

இலங்கையுடனான சர்வதேச ஒரு நாள் தொடரில்; நியுசிலாந்து அணியில் அனுபவமுடைய வீரர்கள் சிலர் விளையாடமாட்டார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது.

கென் வில்லியம்சன், டிம் சவுதி, மற்றும் மிச்செல் செட்னர் ஆகியோர் இலங்கை அணியுடனான போட்டியில் களமிறங்க மாட்டார்கள் எனவும் இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்காக நியுலாந்து கிரிக்கட் அணியின் பல வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதோடு இந்தியன் பிரிமியர் லீக் போட்டித்தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்