நீதிமன்றில் சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

-பதுளை நிருபர்-

நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை வெலிமடை நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக கம்பளையில் இருந்து 62 வயதுடைய முதியவர் ஒருவர் வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த முதியவர் வெலிமடை நீதிமன்ற உள்நுழையும் நுழைவாயில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வெலிமடை பொலிஸ்நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.