வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா

வெள்ளத்தில் மிதக்கும் கலிபோர்னியா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் தெற்கு சான் ஃப்ரான்சிஸ்கோ, ஸ்பிரிங்வில்லி, பஜாரோ, சாண்டா குரூஸ் ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வீடுகள்,கட்டடங்கள்,முக்கிய சாலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.இதையடுத்து, தாழ்வான பகுதிகளில் இருந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்