
பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் பலி
பரோட்டா தொண்டையில் சிக்கி பெண் பலி
இந்தியா கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆணைக்கரை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காலை உணவு உண்ணும் போது தொண்டையில் பரோட்டா துண்டு சிக்கிக் கொண்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
ஜானகி வயது 68 என்கிற பெண் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தனது கணவருடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டுள்ளனர்.
ஜானகி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென அவரது தொண்டையில் பரோட்டா துண்டு சிக்கிக் கொண்டது. இதனால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
ஜானகியை உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
