
தந்தையை துப்பாக்கியால் சுட்ட மகன்
தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மகன்
இந்தியா தமிழ்நாட்டில், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோ்ந்த தந்தை ஒருவரை அவரது மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.
பன்னீா்செல்வம் வயது 65 என்கிற விவசாயின் மகன் கருணாநிதி வயது 45 என்பவரே இவ்வாறு கொலை செய்ய முயன்றுள்ளார். கருணாநிதிக்கும் அவரது மனைவி புனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் புனிதா கணவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என கூறி கருணாநிதி தனது தந்தையிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
வழக்கம் போல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கருணாநிதிக்கும் பன்னீர்செல்வத்திற்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்றுள்ளது அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
ஆத்திரமடைந்த கருணாநிதி தான் அனுமதியில்லாமல் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் தனது தந்தை என்றும் பாராமல் பன்னீர்செல்வத்தை நோக்கி சுட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் வேதாரண்யம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்