எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

பெற்றோல் நிலைய ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் கைதடியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஊழியர்களை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மிரட்டியுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இருவர் மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்புவதற்காக சென்றிருந்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக எரிபொருள் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை “நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு சம்பவம் தங்களுக்கும் இடம்பெறும்”  என மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மிரட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்