மாமியாருக்கு மூக்கறுப்பு

மாமியாரின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று இந்தியா – மத்திய பிரதேசத்தில் பரபரப்பாக பதிவாகியுள்ளது.

இந்தியா – மத்தியப் பிரதேசம் – மோர்னியா மாவட்டத்தின் சந்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஹ்மத் பகேல், அவரது மனைவி ராம் விலாசி. இந்த தம்பதிக்கு ஷியாம் சுந்தரி என்ற மகள் உள்ளார். தனது மகளை பக்கத்து ஊரில் வசிக்கும் ராஜூ பகேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

மகளின திருமண வாழ்க்கையில சமீப காலமாக சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது. மகளை மருமகன் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவத்தால் மன உளைச்சலுக்குள்ளான  ஷியாம் சுந்தரி பொலிஸாரிடம் புகார் அளித்து கணவனை பிரிந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் மகளை பார்க்க பெற்றோர் சென்றுள்ளனர். வாழ்க்கையில் ஏற்பட்ட சச்சரவு தொடர்பாக மகளிடம் பேசிய நிலையில், இனி தன்னால் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என ஷியாம் சுந்தரி கூறியுள்ளார்.

இந்த துன்புறுத்தலை தொடர்ந்து தனது பெற்றோருடன் அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது அவரது மருமகன் தனது 2 உறவினர்களுடன் சேர்ந்து மாமனார், மாமியாரை இடை மறித்து தகராறு செய்துள்ளார். அவ்வேளை , திடீரென ஆத்திரத்தில் மருமகன் அவரது மாமியார் ராம் விலாசியின் மூக்கை அறுத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, தனது மனைவி ராம் விலாசியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார் ரஹ்மத். மேலும், இது தொடர்பாக பொலிஸாரிடம் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது மனைவியை மாமியார் தான் தூண்டிவிட்டு பிரச்னை உருவாக்குவதாக கூறி மருமகன் மூக்கை அறுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட ராம் விலாசி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்