
இறக்குமதித் தடை பற்றி நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
இறக்குமதித் தடை பற்றி நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில், எதிர்வரும் வாரங்களில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் விலைகள் கணிசமாக குறைவடையவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதேநேரம் டொலர் பெறுமதி வீழ்ச்சி நாட்டின் ஏற்றுமதியில் ஒரு சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அது தற்காலிகமானதே என அவர் கூறியுள்ளார். மேலும் இறக்குமதி தடைகளை தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இறக்குமதி தடைகள் தளர்த்தப்படுமாக இருந்தால் சரியான முகாமைத்துவ பொறிமுறை ஒன்று வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அது தளர்த்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்