
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் அதிகளவு முதலீடுகளை செய்ய அழைத்துள்ளதாக முதலீட்டு உக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் தெவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் இ “சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வைப்பதற்கான பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதியாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய நியமனம் இலங்கையின் பொருளாதார மீட்பின் ஒரு மிகப் பெரும் பங்காக இருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
சர்வதேச நாடுகளில் உள்ளவர்களின் முதலீடுகள் மிக முக்கியமானது என ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் உலக நாடுகளில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்தோரை இலங்கையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடிஇ அரசியல் நெருக்கடியால் முதலீட்டாளர்கள் முன் வரவில்லை.
தற்போது மீண்டும் இலங்கையின் பொருளாதாரம் வளர்சடசழ பாதையை நோக்கி செல்கிறது. இது போன்ற சந்தர்ப்பத்தில் சர்வதெச முதலீட்டாளர்களை தற்போது ஜனாதிபதியின் பொருளாதார மீட்புக்கான திட்டங்களால் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கிப் பயணிக்கின்றது. இது போன்ற சந்தர்ப்பத்தில் சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து அவர்களை இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவே எனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கான முயற்சியை எவ்வித தடையுமின்றி முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளேன்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
