
அரச அச்சகத்திற்கு பொருட்களை விநியோகித்தவர்களுக்கு 50 கோடி ரூபாவுக்கு மேல் நிலுவை
அரச அச்சகத்திற்கு பேப்பர் (Paper), டோனர் (Toner), மை(Ink) போன்றவற்றை சப்ளை செய்தவர்களுக்கு திறைசேரி இதுவரை 50 கோடி ரூபாவுக்கு மேல் நிதி செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலுவைத் தொகையால், பல விநியோகஸ்தர்கள் அரசு அச்சகத்திற்கு பொருட்களை வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்க செய்தித் தொடர்பாளர் திருமதி கங்கானி கல்பனா லியனகே, நிலுவைத் தொகையை தவணை முறையில் அவர்களுக்கு செலுத்துமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
