அம்பாறையில் புதையல் தோண்டியதில் ஆறு பேர் கைது

அம்பாறை – தமண பக்மிட்டியாவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஆறு பேர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது..

பொலிஸாரின் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த தேடுதலின் போது குறித்த ஆறுபேரும் கைதாகியுள்ளனர்.

புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்