
ஆயுர்வேத வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும்
ஆயுர்வேத வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும்
ஆயுர்வேத வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என ஆயுர்வேத வைத்தியர்கள் சங்க தலைவர் வைத்தியர் பி. ஹேவாகமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியர்களின் இடமாற்றம் தொடர்ந்தும் மந்த நிலையில் இருப்பதற்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே இதற்கான காரணமாகும்.
இந்த மாத இறுதிக்குள் தங்களுக்கான இடமாற்றம் உரிய வகையில் வழங்கப்பட வேண்டும்.இல்லையெனில் கடும் நடவடிக்கையை எடுக்க நேரிடும் என ஆயுர்வேத வைத்தியர்கள் சங்க தலைவர் வைத்தியர் பி. ஹேவாகமகே எச்சரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
