இலங்கையில் தங்கத்தின் விலையின் நிலை

இலங்கையில் தங்கத்தின் விலையின் நிலை

நேற்று வியாழக்கிழமையை  விடவும், இன்று வெள்ளிக்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 10, 000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என அந்த சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை 145, 000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, இன்று வெள்ளிக்கிழமை 155,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை,இன்று வெள்ளிக்கிழமை ஒரு இலட்சத்து 42 ஆயிரம் ரூபாவாக உள்ளதென அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்