போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களும் போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்