ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பதுளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பதுளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்திய போது, வீட்டில் இருந்து 6,300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதே பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நோனா அக்கா என்ற பெண் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது

சந்தேக நபரை இன்று வெள்ளிக்கிழமை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்