சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 16 தாய்லாந்து யுவதிகள் கைது

தாய்லாந்து யுவதிகள் 15 பேர், குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து கொழும்பு உள்ளிட்ட அண்மைய பிரதேசங்களில் ஆறு மசாஜ் நிலையங்களில் பணியாற்றினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, கல்கிஸை மற்றும் கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள மசாஜ் நிலையங்களில் இவர்கள் பணியாற்றியமை தெரிய வந்துள்ளது.

அவர்களில் சிலர் விபசார தொழிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றும் வரையிலும் வெலிசறை தடுப்பு முகாமில் அவர்களை தடுத்துவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க