வசந்த முதலிகே விடுதலையடைவாரா?

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.போதிய சாட்சியங்கள் இன்மையால் வசந்த முதலிகேயை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தநிலையிலேயே, சட்டமா அதிபரினால் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க எதிர்வரும் 27 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்