தனியார் நிறுவனம் ஒன்றில் 4 கோடி மோசடி செய்தவர் கைது

தனியார் நிறுவனம் ஒன்றில் 4 கோடி மோசடி செய்தவர் கைது

சுமார் 4 கோடி ரூபா தனியார் நிறுவனமொன்றில் இருந்து மோசடி செய்த அதன் ஊழியர் ஒருவர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மொரட்டுவ மொல்பே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான குறித்த சந்தேகநபர் குறித்த தனியார் நிறுவனத்தில் பற்றுச்சீட்டுகளில் தொகைகளை மாற்றியமைத்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்  குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரை இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்