இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.இலங்கை அணிசார்பில் குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேலும், தனஞ்சய டி சில்வா 39 ஓட்டங்களுடனும், கசுன் ராஜித்த 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் டிம் சவுத்தி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மாட் ஹென்றி 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்