வாடகை வீட்டில் A/C திருட்டு: பெண் கைது

சொகுசு வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கு பொருத்தப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வீட்டின் உரிமையாளர் வீட்டுக்குச் சென்று குளிரூட்டிகள் தொடர்பில் ஆராய்ந்த போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 6 குளிரூட்டிகளும் காணாமல் போயிருந்ததாக கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழு விசாரணைகளை மேற்கொண்ட போதுகஹதுடுவ பொல்கசோவிடவில் உள்ள கடையொன்றில் ஆறரை இலட்சம் ரூபாவிற்கு அடகு வைக்கப்பட்டிருந்த ஆறு குளிரூட்டிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

30 வயதான சந்தேகநபர் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அறிந்ததும் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான குறித்த பெண் கினிகத்தேனையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்