
இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை திருடிய பிக்கு உள்ளிட்ட இருவர் கைது
இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை திருடிய பிக்கு உள்ளிட்ட இருவர் கைது
பணாகொட இராணுவ முகாமை அண்டிய பாதுகாவலர் அறையில் இருந்து ரீ – 56 ரக துப்பாக்கியொன்றை திருடிய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் பௌத்த பிக்கு ஒருவர் உட்பட இருவரை கைது செய்துள்ளதுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த 3ஆம் திகதி பணாகொட இராணுவ முகாமின் குடியிருப்பு தொகுதிக்கு அருகில் உள்ள பாதுகாவலர் அறையில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாயிடமிருந்து ரீ-56 ரக துப்பாக்கி, 120 தோட்டாக்கள், 4 மெகசின்கள் மற்றும் பாதுகாப்புப் பை என்பன திருடப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் மூலம், காவல் அறையிலிருந்து 100 மீற்றர் தொலைவில் மதகு ஒன்றுக்கு அடியிலிருந்து, 30 தோட்டாக்கள் அடங்கிய மெகசின் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள வர்த்த நிலையமொன்றிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் ஹோமாகம, கொடகமவில் உள்ள விகாரை ஒன்றில் தங்கியிருந்தபோது, கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பொலிஸ்துறைமா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
