Last updated on April 28th, 2023 at 05:12 pm

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா?

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா?

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா?

ஆசியரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக 2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்படும் எனவும், 2023 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர  உயர்த்தரப் பரீட்சைக்கான திகதியில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய போதே ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் காலத்தாமதத்துடன் இடம்பெறுகின்றது, இதனாலேயே பெறுபேறுகளை உரிய திகதியில் வெளியிட முடியாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஆசியரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்த்தரப் பரீட்சைக்கான திகதியில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்