
நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க கட்டண திருத்த வர்த்தமானிக்கு ஒப்புதல்
நிறுவனம் மற்றும் தொழிற்சங்க கட்டணங்கள் திருத்தம் தொடர்பான வர்த்தமானிக்கு கைத்தொழில் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நடைபெற்ற குழுக்கூட்டத்தில் மாவட்ட மற்றும் உள்ளுராட்சி மட்டத்தில் தற்போதுள்ள கைத்தொழில் மற்றும் புதிய தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காக தேவையான கடனுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.