மட்டக்களப்பில் உணவக சமையலறைக்குள் நாய்

மட்டக்களப்பில் உணவக சமையலறைக்குள் நாய்

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் பொதுச் சுகாதார  பரிசோதகர் அதிகாரிகளினால்  திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது உணவகமொன்றின் சமையலறையில் வளர்ப்பு நாயை வைத்துக் கொண்டு உணவு தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலுள்ள உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள் பொதியிடப்பட்ட உணவுப் பொருட்களின் லேபல், உணவுப் பொருட்களின் காலாவதி தினம், வெதுப்பகங்களில் வைத்திருக்கும் உணவின் தரம் ,  உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு சட்டத்தை மீறும் வகையில் வைக்கபட்டிருந்த உணவுப் பொருட்கள் என்பவற்றை திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில்,

உணவகமொன்றிலேயே நாய் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கிசாந்தராஜ் தெரிவித்தார்.மேலும்,  சமையலறையில் நாய் வளர்த்த வர்த்தகர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்  தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்