சீனாவின் சீருடை உதவி முழுமையாக கிடைத்துள்ளது

சீனாவின் சீருடை உதவி முழுமையாக கிடைத்துள்ளது

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான உதவி முழுமையாக கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீனாவினால் வழங்கப்படும் சீருடை தொகுதியின், இறுதிக்கட்ட விநியோகம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,  பாடசாலை சீருடைக்கா உதவி முழுமையாக கிடைத்துள்ளதாகவும் இதற்கமைய சீருடை விநியோகம் விரைவில் இடம்பெறும் எனவும்  தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்