வாக்குச்சீட்டு அச்சிடலுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கோரி கடிதம்
வாக்குச்சீட்டு அச்சிடலுக்கான நிதி மற்றும் பாதுகாப்பு கோரி கடிதம்
அரச அச்சகர் கங்காணி லியனகே வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கோரி பொலிஸ்துறைமா அதிபருக்கும், நிதியமைச்சின் செயலாளருக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அரச அச்சகர் கங்காணி லியனகே தமது கடிதத்தில் வாக்குச்சீட்டு அச்சிடப்படும் காலப்பகுதியில் பகல் வேளையில் 35 காவல்துறையினரும், இரவு வேளையில் 28 காவல்துறையினரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அவசியமாகவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நிதியமைச்சின் செயலாளருக்கு வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி அவர் அக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்