சட்டவிரோதமாக தப்பிச் செல்ல திட்டமிட்ட ஆறு அகதிகள் கைது

இலங்கைக்கு தமிழக நாகபட்டிணம்  வேளாங்கண்ணியில் இருந்து சட்டவிரோதமாக தப்பிச் செல்ல திட்டமிட்டதாகக் கூறப்படும் ஆறு அகதிகள் இந்தியாவின் ‘கியூ’ பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேளாங்கண்ணியில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் வயது 18 தொடக்கம் வயது 40க்கு இடைப்பட்ட ஆறு பேரே இவ்வாறு கைதாகினர்.

அவர்கள் கடந்த சில நாட்களாக இருந்த விடுதியை விட்டு வெளியேறி வேளாங்கண்ணி பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.

மயிலாடுதுறை – பூம்புகார் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப் படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் குறித்த நபருக்கு 17 இலட்சம் இந்திய ரூபாவை செலுத்த இணங்கியிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த 6 பேரிடமும் இந்தியாவின் ‘கியூ’ பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்