இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ ஒதுக்கம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாத இறுதியில் உத்தியோகபூர்வ ஒதுக்கத்தின் மதிப்பு 2,121 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.இது பெப்ரவரி மாத இறுதியில் 2,217 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்து 4.5வீதத்தால் அதிகரிப்பை பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனுள் தற்போதைய உத்தியோகபூர்வ ஒதுக்கத்தில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான சீனாவின் மக்கள் வங்கியின் பரிமாற்ற வசதியும் உள்ளடங்கியுள்ளதுடன்,  இது பயன்பாட்டிற்கான நிபந்தனைக்கு உட்பட்டதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்