தப்பிச்செல்ல முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

தப்பிச்செல்ல முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

கேகாலையில் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்ட போது சிறைச்சாலை அதிகாரியொருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இம்புல்கொடவத்தை மெல்சிறிபுர பகுதியைச் சேர்நத 33 வயதான நபர் ஒருவரே இன்று புதன்கிழமை அதிகாலை தப்பிச் செல்ல முற்பட்ட போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இந்த நபர், சிறைச்சாலைக்கு வெகு தொலைவில் உள்ள மாநகர சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள காணியில் விழுந்து கிடந்த நிலையில்,

சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்