
நோயாளர் காவு வண்டியில் மோதி 9 வயது குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பூநகரி- முக்கம்பன் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நோயாளர் காவு வண்டியில் மோதியதில் 09 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
வீதியில் நடந்து சென்ற போது குழந்தை நோயாளர் காவு வண்டியில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து குழந்தை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பூநகரி செம்மன்குன்று பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிலோஜன் (09 வயது) சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அம்புலன்ஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.