ஹரக் கட்டா – குடு சலிந்து உட்பட 8 பேர் கைது!

மடகஸ்காரின் முன்னணி ஊடக வலையமைப்பான L’EXPRESS இணையத்தளம் தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரதமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித குணரத்ன உள்ளிட்ட 8 பேர் மடகஸ்காரில் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று திங்கட்கிழமை (6) செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த 8 பேரும் மடகஸ்காரில் உள்ள இவாட்டோ (Ivato) சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் ஹரக் கட்டாவின் மனைவியும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இந்த இணையதளத்தின் அறிக்கையின்படி, கடந்த மார்ச் முதலாம் திகதி ஹரக் கட்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹரக் கட்டாவின் மனைவியென கூறப்படும் பெண்ணிடமிருந்து அந்நாட்டின் நாணய பெறுமதியிலான 38 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய ஐந்து பேர் கடந்த பெப்ரவரி 12ம் திகதியன்று நாட்டின் Nosy Be சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் வந்துள்ளனர் என்றும் அவர்கள் கடந்த மார்ச் முதலாம் திகதி மடகஸ்காரை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,  அவர்களை விசாரிப்பதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுவொன்று அந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படலாம் என்றும், அவர்களை அழைத்துவரலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்