
இந்தோனேசியாவில் நிலச்சரிவு
இந்தோனேசியாவில் நிலச்சரிவு
இந்தோனேசியாவில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெளிப்புற தீவுகளில் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ரியாவு தீவில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 50 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் இறந்துள்ளனர்.
கடந்த வாரம் 41,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
