இந்தியாவில் புதுவகை வைரஸ் 40 குழந்தைகள் பலி

இந்தியாவில் புதுவகை வைரஸ் 40 குழந்தைகள் பலி

இந்தியாவில் மேற்கு வங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதுவகையான வைரஸால் பாதிக்கப்பட்டு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடினோ வைரஸ் (Adenovirus) எனும் புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த வைரஸ் அதிகமாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மத்தியில் காணப்படுகிறதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

கடந்த 9 நாட்களில் அடினோ வைரஸ் (Adenovirus) தொற்றால் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.இந்த வைரஸ் கண்கள், நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் என கூறப்படுகின்றது.

குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் போன்ற அறிகுறி இருந்தால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்