Last updated on April 11th, 2023 at 07:30 pm

நாய் மருந்து கலந்த உணவை கொடுத்த மாணவர்கள்

சக மாணவனுக்கு நாய் மருந்து கலந்த உணவை கொடுத்த மாணவர்கள்

திருகோணமலை – சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 7 மாணவன் ஒருவருக்கு மதிய உணவில்இ நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படும் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான செயலைச் செய்த ஆறு மாணவர்களின் எதிர்காலத்தை கருதிற்கொண்டுஇ பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவன் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இ தனது வகுப்பில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களையும் மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது..

நாய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தை உணவில் கலந்ததாக கூறப்படும் ஆறு மாணவர்களையும் அழைத்து எச்சரித்தால் போதும் என நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

மேலும் நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் ஆறு மாணவர்களையும் மன்னிக்க முடிவு செய்திருப்பதை தாமும் பாராட்டுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்