Last updated on April 28th, 2023 at 05:12 pm

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளில் மேலும் தாமதம்

அண்மையில் நிறைவடைந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடுகள் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் பங்குகொள்ளும் ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்பட்ட யோசனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளும் பிற்போடப்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்