பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதல்

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 9 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் சிப்பி நகரில் பொலிஸார் பயணித்த வாகனம் மீது இந்த குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸார் பயணித்த வாகனம் மீது தற்கொலை குண்டுதாரி தனது உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு சைக்கிளில் வந்து மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குண்டு வெடித்ததில், 9 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரிகளை சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்