பெண் கொலை – கணினி பொறியியலாளரான கணவர் கைது
பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் புஸ்ஸல்லாவை பகுதியில் பதிவனதையடுத்து அது தொடர்பில் கணினி பொறியியலாளரான அவரது கணவரை கைதுசெய்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர் நுகேகொடை – விஜேராம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த வேளையில் விசாரணைக்காக இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பொட – கட்டுகித்துல பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சதாசிவம் நிரஞ்சலா என்ற பெண் புஸ்ஸல்லாவ – சோகம தோட்டப்பகுதியில் உள்ள புதரொன்றிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை (4) சடலமாக மீட்கப்பட்டார்.
கயிறு போன்றவற்றால் கழுத்தை நெரித்து அவர் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் பொலிஸாரின விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தம்பதியினர் கொழும்பில் இருந்து கட்டுகித்துல பகுதிக்கு சென்றிருந்தபோதுஇ புஸ்ஸலாவை நகரில் வைத்து சந்தேகநபரான கணினி பொறியியலாளருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் சந்தேகநபர் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்