Last updated on April 11th, 2023 at 07:30 pm

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட போது, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன் போது 12,000 ரூபா போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்