பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும்
பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும்
பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், அவற்றை மேலும் அதிகரிக்க எந்த தயாரிப்பும் இல்லை எனவும், குறைந்தபட்சம் பாண் 1 இறாத்தல் 100 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பாண் ,பணிஸ் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
தற்போது ஒரு இறாத்தல் பாண் 150, 160, 170 எனவும் சில பகுதிகளில் 180 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்த ஜெயவர்தன, அந்த விலைகளை நுகர்வோரால் தாங்க முடியாது எனவும் அதனால் பாண் ,பனிஸ்களின் விற்பனை 20 முதல் 25 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பேக்கரி தொழிலை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளால் 7000 பேக்கரிகளில் 5000 மூடப்பட்டுள்ளதாகவும் ஜெயவர்தன கூறினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்