யூடியூப் பார்த்து தான் பிரசவித்த குழந்தையை கொன்ற 15 வயது சிறுமி

 

யூடியூப் பார்த்து தான் பிரசவித்த குழந்தையை கொன்ற 15 வயது சிறுமி

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் யூ-டியூப் காணொளிகளை பார்த்து 15 வயது சிறுமி ஒருவர் குழந்தையொன்றை பெற்றெடுத்து, அதனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

9 ஆம் தரத்தில் கற்றுவரும் இந்த சிறுமிக்கு சமூகவலைத்தளம் மூலம் இளைஞர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.பின்னர் இருவரும் நேரில் சந்தித்த சந்தர்ப்பமொன்றில், குறித்த இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி, சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

குறித்த சிறுமியின் செயற்பாடுகள் மாற்றம் ஏற்பட்டதையறித்து அது குறித்து பெற்றோர் வினவியபோது, தனக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளார்.வைத்தியசாலைகளுக்கு சென்றால் பிரச்சினைகள் ஏற்படுமென்று கருதிய கடந்த 3 ஆம் திகதி வீட்டில் தனியாக இருந்த வேளையில், யூ-டியூப்பில் காணொளிகளை பார்த்து தாமாகவே குழந்தையை பிரசவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குழந்தை அழுதுள்ள நிலையில், சத்தம் கேட்டால் மாட்டிக்கொள்வோம் என நினைத்து இடைப்பட்டியினால் சிசுவின் கழுத்து நெரித்துக் கொலை செய்து, உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

சிறுமியின் தாயார் பணி முடிந்து வீடு திரும்பிய போது பல இடங்களில் இரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு சிறுமியிடம் விசாரித்தபோது, மாதவிடாய் காரணமாக இந்த இரத்தக்கறை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.சந்தேகம் கொண்ட தாயார் தொடர்ந்தும் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை சிறுமி, தமது தாயிடம் கூறியுள்ளார்.

இந்தநிலையில், தாயின் முறைப்பாட்டுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  கொலை செய்யப்பட்ட சிசுவின் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதேவேளை, சிறுமியையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

காவல்துறையின் பாதுகாப்புக்கு மத்தியில் சிறுமி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்