பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்பு
பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்பு
பங்காளதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிதகுண்டாவில் கேஸ் ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
குறித்த தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்