
எரிபொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம்
எரிபொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம்
எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
அண்மைய நாட்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் பண வீக்கம் குறைவடையும் இதன் காரணமாக எரிபொருட்களில் விலைகள் குறைவடையும் சாத்தியம் காணப்படுகின்றது.மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைவடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் எதிர்காலத்தில் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
